நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு: சிபிஐக்கு மாத்துங்க!

25

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பா ளர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், அவருக்கு சொந்தமான தோட்டத்தி லேயே எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த படுகொலையை சாதாரணமான கொலை சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. கொல்லப்பட்டவர் அப்பகுதியில் செல்வாக்கானவர் காங்கிரஸ் கட்சியின் மாவட் டத் தலைவர் நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு நன்கு தெரிந்தவர் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற பாரா ளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் போட் டியிட்டது. அத்தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி இருந்தது.

இதனால் கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளன. எனவே, தி.மு.க. அரசின் கட் டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை விசாரித்தால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக் கில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை. எனவே, இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.