பஸ் ஸ்டாண்டில் கர்ப்பிணி போல நடிப்பவர்களின் சீக்ரெட்!

24

திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் கர்ப்பிணிகள் போல் வேடம் அணிந்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பஸ் ஸ்டாண்டில் உள்ள எஸ்கலேட்டர் பகுதிக்கு வந்த இந்த இரண்டு பெண்களும், தங்களது வயிற்றில் துணி மூட்டைகளை சுற்றி கொண்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கர்ப்பிணிகள் போல் வேடமணிந்து இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பொதுமக்கள் சிலர் இதை கவனித்து இருவரையும் கையும் களவுமாக பிடித்து அவர்களை எச்சரித்தனர். தொடர்ந்து அவர்களை சிலர் தாக்கவும் முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

வீடியோ இணைப்பு: https://fb.watch/rX6irQoS_r/