இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொரு ளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கி றது. அங்கு இந்தியர்கள் ஏராளமானோர் சுற்றுலா சென்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தலில் வென்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்து வருகிறார். மேலும் இந்திய பிரதமர் மோடியை 2 மாலத்தீவு அமைச் சர்கள் விமர்சனம் செய்தனர். இதனால் இரு நாடுகள் இடை யேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலர் தவிர்தனர்.
இதனால் மாலத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமள வில் குறைந்தது. இது மாலத்தீவின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவுக்கு முன்பு போல் சுற் றுலாவுக்கு வர வேண்டும் என்று மாலத்தீவு வலியுறுத்தியது. இந்த நிலையில் தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள் ளது. இது குறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் இப் ராகிம் பைசல் கூறும் போது, எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட எங்களது அரசும் இந்தியாவுடன் இணைந்து செயல் பட விரும்புகிறது.
நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம். இந்திய சுற்றுலா பயணிகளுக்கு எங்களது மக்களும் அர சாங்கமும் அன்பான வரவேற்பை வழங்குவார்கள். சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்தியர்களிடம் தயவு செய்து மாலத்தீவின் சுற்றுலாவின் ஒரு பகுதியாக இருக்கு மாறு நான் கூற விரும்புகிறேன். எங்கள் பொருளாதாரம் சுற் றுலாவை சார்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு இந் தியர்கள் பங்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.