பாரிஸிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு சென்ற விமானத்தின் முன்பக்க தரையிறங்கும் கருவி செயலிழந்தது. இதனால் பின்பக்க கியர் மற்றும் சக்கரங்களை கொண்டு விமானம் தரையிறக்கப்பட்டது.
FDX எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு சொந்தமான போயிங் 767 சரக்கு விமானத்தின், முன்பக்க கியர் செயலிழந்து தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டது. அதனால் விமானி இஸ்தான்புல் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.
இந்த சம்பவத்தையடுத்து ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. துருக்கியின் போக்குவரத்து அமைச்சகத்தின் வெளியிட்ட தகவல்களின்படி, இந்த விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.