எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட கூடாது?

32

பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை சிட்ரஸ் பழ வகைகளுடன் சேர்த்து உண்பது நல்லதல்ல. சிட்ரஸ் பழங்களிலுள்ள அசிடிட்டி பால் பொருட்களிலுள்ள புரோட்டீனை கெட செய்யும். இதனால் ஜீரணக் கோளாறும் ஊட்டச்சத்துக் குறைபாடு உண்டாகும்.

மாவுச் சத்து அடங்கிய உணவுகளை புரோட்டீன் சத்து அதிகமுள்ள உணவுகளோடு சாப்பிட கூடாது. ஏனெனில், ஜீரணமாகும் செயலில் மந்த நிலை ஏற்பட்டு வயிற்றில் உப்புசம் போன்ற கோளாறுகள் உண்டாகும்.

பாலுடன் மீனை சேர்த்து உண்வே கூடாது. காரணம் இவை இரண்டிற்கும் ஜீரணமாவதற்கு வெவ்வேறு என்சைம்கள் தேவைப்படுகின்றன. இதே போல பாலுடன் வாழைப் பழத்தை சேர்த்து உண்ணுவதும் நல்லதல்ல.