உளறிய உதயநிதி: கூட்டத்தில் இருந்து வந்த சிக்னல்! – Udhayanidhi Stalin

42

Udhayanidhi Stalin: திமுக கூட்டணி சார்பில் திருச்சி மக்களவை தொகுதியில் மதிமுக வேட்பாளராக வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

துரை வைகோ திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த சின்னத்தை சொல்லி வாக்கு கேட்காமல் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று சொதப்பலாக பேசினார் உதயநிதி. தப்பாகச் சொன்னாலும் உடனே சமாளிக்கவும் செய்தார்.

அலர்ட்டாக இருந்த கட்சி நிர்வாகிகள் உடனே தீப்பெட்டி சின்னம், தீப்பெட்டி சின்னம் என்று கோஷம் போட்டு உதயநிதிக்கு நினைவூட்டினர். கூட்டத்தின் கூச்சலைக் கேட்டு சுதாரித்த உதயநிதி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் தீப்பெட்டி சின்னத்தைச் சொல்லி துரை வைகோவுக்கு வாக்களிக்குமாறு கேட்டார். உதயநிதியின் உளறல் பேச்சால் சிறிது நேரம் கூடத்தில் சிரிப்பலை எழுந்து அடங்கியது.