NASA: அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டும் அரியவகை சூரிய கிரகணம் நடக்கிறது. இதற்கு முன் நடநாத சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் மிக நீண்ட நேரம் நீடிக்கும் என்பதால் இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
நாசாவின் ஆய்வு விமானம் 50 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கிரகணத்தை போட்டோ எடுக்கும். மேலும் பல ஆய்வு உபகரணங்களும் இந்த விமானங்களில் நிறுவப்பட்டுள்ளன. கிரகணத்தின் போது வளிமண்டல மற்றும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யும் திட்டமும் உள்ளது.
இதற்காக 600 பலூன்கள் வானில் பறக்க விடப்படும். பூமியின் மேற்பரப்பில் இருந்து 35 கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்ட பலூன்களில் ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை கிரகணத்தின் விளைவுகளை பதிவு செய்யும். இது தவிர ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களும் இந்த கிரகணத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வார்கள்.