ரஜினி ரசிகரின் கடையில் டீ குடித்த ஸ்டாலின்! – Stalin Tea

37

Stalin Tea: தேனியை சேர்ந்தவர் ரஜினி ரசிகர் பாண்டீஸ்வரன். இவர் கடந்த 40 ஆண்டுகளாக தேனி பாரஸ்ட் ரோட்டில் கெளமாரி காபி பார் என்ற கடையை நடத்தி வருகிறார். அரசியல் பிரபலங்களுக்கு பிடித்தது இயவருடைய கடை. தேனிக்கு வரும்போதெல்லாம் கருணாநிதி, கனிமொழி, பெரியசாமி, தங்க தமிழ்ச்செல்வன் என பல அரசியல் பிரமுகர்கள் இங்கு தான் டீ குடிப்பார்களாம்.

தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்காக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் தேனி சென்றுள்ளார். கம்பம் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கிய ஸ்டாலின் காலை பெரியகுளம் ரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு வாக்கிங் வந்தார். அப்போது சந்தைக்குள் சென்று சுற்றி பார்த்துவிட்டு தேனி பாரஸ்ட் ரோட்டில் கெளமாரி டீ கடையில் டீ குடித்தார்.