உண்மையில் என்ன நடந்தது? வாய் திறக்கிறார் அமீர் -Ameer Sultan

46

Ameer Sultan: 2000 கோடி‌ ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.‌

அவரிடம் நடந்த விசாரணையில் ஜாபர் சாதிக் தயாரிக்கும் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்திற்காக இயக்குநர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசியது தெரியவந்தது. முன்பணமாக 28 லட்சம் ரூபாயை அமீர் ஜாபர் சாதிக்கிடமிருந்து பெற்றதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்த நிலையில் இப்போது நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீர் உட்பட 3 நபர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். விசாரணையில் ஆஜராகி அமீர் விளக்கம் தந்தார். சமூக வலைத்தளங்களில் என் மீது சுமத்தப்படும் எந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். எப்போதும் என்னிடமிருந்து வரும் ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன் என அமீர் கூறியுள்ளார்.