காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கலாமா? – Morning Water

43

Morning Water: ஜப்பானியர்கள் காலை எழுந்ததும் உடனே 2 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தினசரி காலை பழக்கமாக இதை கடைப்பிடிக்கின்றனர். ​இதனால் ​தலைவலி பிரச்சனை குறையுமாம். பெருங்குடல் தொற்று இருப்பின் அதுவும் சீராகும். காரணம் உங்கள் குடல் சுத்தம் செய்யப்பட்டு சீராக இயங்குவதே இதற்கு காரணம். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாம்.

காலை எழுந்ததும் 2 கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடனே சிறுநீர் கழிக்க வரும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ​காலை வெறும் வயிற்றில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது சளி, இருமல் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.