Hemangi Sakhi: உத்தரபிரதேச மாநிலத்தில் சாதுக்கள் அமைப்பை சேர்ந்தவர் 46 வயதான திருநங்கை மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி. துறவியான இவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். போகும் இடங்களில் எல்லாம் இந்து மதத்தை பரப்பி வருகிறார். இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி போட்டியிட உள்ளார்.
நான் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் களமிறங்கி உள்ளேன். திருநங்கைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படுவது இல்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை. எங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என கூறியுள்ளார் ஹேமாங்கி சகி