இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அவசர எச்சரிக்கை! – MEA India

36

MEA India: சிரியா நாட்டில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தூதரகத்தில் இருந்த ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 2 தளபதிகள் உட்பட 7 பேர், சிரியாவைச் சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது போர் தொடுக்க போகிறோம் என ஈரான் அறிவித்துள்ளது.

இதனால் இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம். இப்போது ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முடிந்தவரை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.