ஜிஎஸ்டி பற்றி கேட்ட பெண்ணை தாக்கிய பாஜகவினர்! – BJP

27

BJP: திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். அப்போது திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பாஜகவினர் தகாத வார்த்தைகளால் பேசி சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த போது சங்கீதா தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.