யாரெல்லாம் ஓவரா போனாங்க? அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்ட பட்டியல்! – Amit Shah

36

Amit Shah: மதுரையை சுற்றியுள்ள மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வந்தார்.

அவரிடம் ஒரு பெரிய பட்டியலை பாஜகவினர் கொடுத்தனர். பிரசாரத்திற்கு செல்வோர் மீது தடியடி நடத்துவது, தேர்தல் அலுவலகம் மற்றும் பிரசாரத்திற்கு அனுமதி தராதது என பல வழிகளில் பாஜகவிற்கு குடைச்சல் கொடுக்கப்படுகிறது. தேர்தல் பணிகளை முடக்கும் வகையில் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் செயல்படுவதாக பாஜக புகார் தெரிவித்து வருகிறது. தன்னுடைய போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார்.

இதனால் பாஜகவுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் பின்னணி விபரங்களை அக்கட்சியினர் சேகரித்து வைத்துள்ளனர். பாஜக வேட்பாளர்களின் பணிகளை முடக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை அமித் ஷாவிடம் கொடுத்தனர். பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிடம் புகார் அளிக்கவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் பாஜக முடிவு செய்துள்ளது