கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த மண்: கழுத்தை பதம் பார்த்த கம்பி! – Accident

33

Accident: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கண்ணப்பன் மூளை என்ற இடத்தில் மகிமலை ஆற்றில் ஷட்டர் அமைக்கும் பணி நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நிறுவனம் பணிகளை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. 15 பணியாளர்கள் ஷட்டர் அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இன்ஜினியர் அருண்ராம் முன்னிலையில் மேற்குவங்கத்தை சேர்ந்த சௌரவ், ராகுல், பாகர் அலி, சுமர் அலி ஆகிய நான்கு பேர் ஆற்றின் கீழே இறங்கி சுவர் எழுப்ப ஆங்கிள் மற்றும் இரும்பு தகரம் கொண்டு சென்ட்ரிங் அடிக்கும் பணியை செய்து வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமர் அலி சரிவில் சிக்கி கழுத்து மற்றும் முகத்தில் இரும்பு பலகை வெட்டியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர். சம்பவம் பற்றி அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமர் அலி உடலை மீட்டனர். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.