மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்! – Human Bones

70

Human Bones: ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதை பொருள் பிரபலமாகி வருகிறது. இளைஞர்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான மக்களின் எண்ணிக்கை இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. குஷ் என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த குஷ் போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளை தோண்டி பிணங்களை சேகரித்து வருகின்றனர். பிணங்களின் எலும்புகளில் இருந்து குஷ் போதைப்பொருள் தயார் செய்யப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் ஃபெண்டானில், கஞ்சா மற்றும் சில ரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது.