சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா: காரணம் என்ன? – Lee Hsien Loong

20

Lee Hsien Loong: சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொது செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிங்கப்பூரில் ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லாத நிலையில் ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் லீ சி யென்னும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தான் பதவி விலகும் அதே நாளில் புதிய பிரதமர் பதவி ஏற்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் பதவி விலகும் அதே நாளில் லாரன்ஸ் வோங் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்பார் என அவர் கூறி உள்ளார்.