மசூதிக்கு ஏழை தானம் அளித்த முட்டை ரூ.2.26 லட்சத்திற்கு ஏலம்! – Egg Sale

27

Egg Sale: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் மல்போரா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த மசூதி ஒன்றை கட்டி வருகின்றனர். அங்குள்ள மக்கள் தங்களால் இயன்ற நன்கொடை அளித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த ஏழை ஒருவர் தன்னிடமிருந்த ஒரு கோழி முட்டையை மசூதி கட்டுமான பணிக்காக தானமாக கொடுத்தார்.

முட்டையை மகிழ்ச்சியுடன் ஏற்ற மசூதி நிர்வாகத்தினர் அதை ஏலம் விட முடிவு செய்தனர். அந்த முட்டை ஏலம் மூலம் பலரது கைக்கு மாறியது. முட்டையை வாங்கும் நபர்கள் மசூதி கட்டுமான பணிக்காக கூடுதல் நிதி கிடைக்க செய்யும் நோக்கில் அதை பலமுறை ஏலத்தில் விட்டனர். வெறும் முட்டையை வைத்து மட்டுமே அதிக நிதி திரட்டப்பட்டது.

இது குறித்து மசூதி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் மசூதி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்ட முட்டையை பலர் போட்டி போட்டு வாங்கி மறு ஏலத்தில் விட்டனர். இறுதியாக 70 ஆயிரல் ரூபாய் கொடுத்து அந்த முட்டையை ஒருவர் வாங்கினார். இந்த ஒரு முட்டையின் வாயிலாக மசூதி கட்டுமான பணிக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது என கூறினார்.