அக்குள் வியர்வை நாற்றம் ஈஸியா போகணுமா? – Under Arm Smell

35

Under Arm Smell: அக்குள் பகுதியில் சிலருக்கு அதிக வியர்வை உண்டாகும். அதிக வியர்வையால் சிலசமயம் நாற்றம் உண்டாவதால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி வரும். நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. தோலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களின் காரணமாக வியர்வை துர்நாற்றம் ஏற்படுகிறது.

இதற்கான காரணங்களை பார்க்கலாம். உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது. இறுக்கமான உள்ளாடைகள் அணிவது. நாள்பட்ட நோய்கள். அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது.

அதிக ரசாயனம் கலந்த கிரீம்களை உபயோகிப்பது. அதிக காற்றோட்டம் இல்லாத இடங்களில் வசிப்பது போன்றவை வியர்வையில் துர்நாற்றம் ஏற்பட காரணங்களாகும். முடிந்த வரை இதை எல்லாம் சரி செய்ய பார்த்தால் அக்குள் நாற்றம் பெரும் அளவில் குறையும்.