6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர்! – Accident

32

Accident: ஹைதராபாத்தில் 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் படர்லா கிராந்தி குமார் ஐடி காரிடாரில் ஆறு நிமிட இடைவெளியில் ஆறு விபத்துக்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர்.

குமார் மது போதையில் தனது காரினை ஓட்டியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் விபத்து மைண்ட்ஸ்பேஸ் அருகே நள்ளிரவு 12:45 மணிக்கு நடந்தது. கடைசி விபத்து நள்ளிரவு 12:51 மணிக்கு நடந்ததுள்ளது. போதையில் இருந்த குமார் மெஹிதிப்பட்டினம் சாலை வழியாக நிஜாம்பேட்டைக்கு சென்றபோது, ​​மூன்று பைக்குகள், கார், ஆட்டோ மீது மோதியுள்ளார்.

குமார் கார் விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு ஒரு உள்ளூர் பாரில் நான்கு மணி நேரம் குடித்திருந்தார்.
மது அருந்தியிருந்ததால் வண்டியை ஓட்ட வேண்டாமென பார் ஊழியர்களின் அறிவுரை தந்த போதிலும், குமார், தான் ஓட்டும் திறன் கொண்டவர் என்று அவர்களுக்கு உறுதியளித்ததாக கூறப்படுகிறது.