கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்! – H5N1

28

H5N1: பறவைக்காய்ச்சல் வைரஸ் கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு 8 மாகாணங்களில் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரவி இருக்கிறது.

பாலில் பறவை காய்ச்சலை பரப்பும் வைரஸ் இருப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே கறந்த பாலை அருந்துவதை தவிர்க்குமாறும் சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவதே பாதுகாப்பானது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பாலில் இருக்கும் கொடிய கிருமிகளை சுத்திகரிப்பு மூலம் அழித்து விடலாம். தற்போது பரவி வரும் பறவை காய்ச்சல் வைரஸ் ஆனது பறவைகள் விலங்குகள் மனிதர்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் ஆனது மிக எளிதாக மனிதர்களுக்கு பரவி அவர்களை கொல்கிறது.