வெள்ளியங்கிரி மலையை விடவா? 6,600 படிக்கட்டுகள்! – China Mountain

28

சீனாவின் தைஷான் பகுதியில் தாய் மலை உள்ளது. 1545 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. மலையின் உச்சியை அடைவதற்கு 6,600 படிக்கட்டுகள் ஏற வேண்டும். கோவிலை தரிசிக்கவும், கலாச்சார சின்னங்களை பார்ப்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கிறார்கள்.

6,600 படிக்கட்டுகள் ஏறுவதற்குள் அவர்களின் கால்கள் வலுவிழந்து சாதாரணமாக ஏற முடிவதில்லை. எனவே மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் வீடியோவாக வெளியாகி உள்ளது.

வீடியோக்களில், படிகள் ஏற முடியாமல் சுற்றுலா பயணிகள் ஊர்ந்து செல்லும் காட்சிகளும் உள்ளது. சில பயணிகள் பாதி படி ஏறிய நிலையில், அவர்களின் கால்கள் நடுங்கியதால் அவர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் உள்ளது. தமிழகத்தின் வெள்ளியங்கிரி மலை இதை விட மோசமாக இருக்கும்.