வெற்றி கணக்கை துவங்கியது பாஜக: லோக் சபா தேர்தலில் முதல் வெற்றி! – Surat Lok Sabha

26

Surat Lok Sabha: குஜராத் மாநிலம் சூரத் மக்களவை தொகுதி வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரத் தொகுதியில் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். இதன் மூலம் முகேஷ் தலாக் போட்டியின்றி எம்பி ஆனார்.

குஜராத்தில் மொத்தம் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி வாக்குபதிவு நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் முடிந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. சூரத் மக்களவை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியை முன்மொழிந்திருந்த 5 பேரில் மூன்று பேர் தங்களது கையெழுத்து இல்லை என தெரிவித்தனர்.

இதனால் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அங்கே வேட்புமனு தாக்கல் செய்திருந்த மற்ற அனைவரும் வாபஸ் பெற்றனர்.