வாக்காளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கம்! – Voters Removed

36

Voters Removed: கோவை தொகுதியிலுள்ள 2048 வாக்குச்சாவடிகளிலும் பாஜகவிற்கு ஆதரவானோர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு கலெக்டர் அளித்துள்ள மேம்போக்கான விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என பாஜக தெரிவித்துள்ளது. பாஜக விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் நாகராஜ் இது குறித்து அறிக்கை வெளியிட்டார்.

கோவையில் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி எண் 214 அங்கப்பா பள்ளியில், 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால், 1,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுபோட முடியவில்லை. அவர்கள் அனைவரும், 30 ஆண்டுகளாக ஓட்டளித்து வருபவர்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்கள். பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஓட்டளிப்பவர்கள்.

இப்படி கோவையில் மட்டும் 5 சதவீத ஓட்டுகள்; அதாவது, 21 லட்சம் ஓட்டுகளில் ஏறக்குறைய, 1 லட்சம் ஓட்டுகள், எந்த முன்னறிவிப்போ, கள விசாரணையோ இன்றி கலெக்டரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தேர்தல் பிரிவு பணியாளர்கள் பெயர்களை நீக்கியுள்ளனர்.