சர்க்கரை அளவு 320: திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்! – Kejriwal Insulin

17

Kejriwal Insulin: டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சிறையில் அவருக்கு இன்சுலின் ஊசி வீட்டில் சமைத்த உணவு போன்றவற்றை வழங்க சிறை நிர்வாகம் மறுத்திருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கெஜ்ரிவாலை சிறையில் கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

கெஜ்ரிவாலுக்கு நேற்று இரவு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 320 என்ற அளவை தாண்டியதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.கெஜ்ரிவால் சிறை சென்ற பின்னர் வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது.