வெயில் தாங்காமல் திடீரென மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்!

25

பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார். யவத்மால் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி போட்டியிடுகிறது.

பாஜக கூட்டணி வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டீலுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது நிதின் கட்கரி, மேடையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிய இடைவெளிக்கு பிறகு, உடல் நலம் தேறிய நிதின் கட்கரி மேடையில் தனது உரையை தொடங்கினார்.

புசாத் நகரில் நடைபெற்ற பேரணியின் போது வெப்பம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளேன், அடுத்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். உங்கள் அன்பிற்கு நன்றி என கூறியுள்ளார்.