ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை முதலில் ஹாட் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அதனை பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுத்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனால் ஹாட் ஸ்டார் யூசர்கள் அனைவரும் ஜியோ சினிமாவுக்கு தாவினர்.
அதுவும் கட்டணம் இல்லாமல் இலவசமாக ஜியோ சினிமா பார்க்கவும் அனுமதி கொடுத்தது. இதனால் ஜியோ ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. மெல்ல மெல்ல யூசர்கள் அதிகமாக வந்தவுடன் ஜியோ இப்போது சந்தா திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட், இந்திய சினிமாக்களையும், வெப் சீரிஸ்களையும் இதில் பார்த்து ரசிக்க முடியும். இதற்கு மாத சந்தா 30 ரூபாய் நிர்ணயிக்க ஜியோ சினிமா முடிவெடுத்துள்ளது. ஆண்டுக்கு 300 ரூபாய் கட்டணமும் விதிக்கபட இருப்பதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.