மீண்டும் அதே எண்ணெயா? போச்சு! எச்சரிக்கும் நிபுணர்கள்! – Cooking Oil

40

Cooking Oil: சமையல் எண்ணெய் ஒருமுறை பயன்படுத்திய பிறகு மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அதிக வெப்பநிலை காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் உணவுத் துகள்கள் கலப்பதினால் அதில் ரசாயன மாற்றங்கள் நடக்கிறது. இதனால் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உருவாகின்றது. இவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி இதயநோய் அபாயத்தை அதிகரிக்கும்.

அதிகமாக பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இனப்பெருக்கம் செய்கிறது. குறிப்பாக பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவை அதில் இருக்கும். இதனால் சால்மனல்லா, ஈக்கோலை போன்ற கிருமிகளால் நோய்கள் ஏற்படலாம். இது கடுமையான வயிற்று உபாதைகளை ஏற்படுத்தி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தான நிலைமைகளைக் கூட ஏற்படுத்தும்.

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெயில் அக்ரிலமைடு என்ற ரசாயன கலவை உருவாவதாக நிபுணர்கள் சொல்கின்றனர். இது ஒரு புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.