ECI: மக்களவை தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழ்நாட்டில் இதுவரை 1,297 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.
தபால் வாக்குகள் அனைத்தும் திருச்சியில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. 39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என அவர் கூறினார்.