பாகிஸ்தான் பெண்ணிடம் துடிக்கும் இந்தியரின் இதயம்: சென்னையில் மறுவாழ்வு!

19

பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது பெண் ஆயிஷா இதய நோயால் பாதிக்கப்பட்டார். இதய செயலிழப்பு ஏற்பட்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஆயிஷாவும், அவரின் குடும்பத்தினரும் சிகிச்சைக்காக வந்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆயிஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதய செயலிழப்பை சரி செய்ய பொருத்தப்பட்டுள்ள இதய பம்ப் வால்வு ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளது. கட்டாயம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சுமார் 35 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.

ஆயிஷாவின் குடும்பத்திற்கு ஒரு அறக்கட்டளை மூலமாக மருத்துவ குழு உதவி பெற்றுக்கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆயிஷாவிற்கு டில்லியில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட இதயமும் வரவழைக்கப்பட்டது. ஆயிஷாவிற்கு சென்னை தனியார் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.