என்னா வெயிலு? இந்தியாவிலேயே 2வது இடம் ஈரோடுக்கு! – Heat wave Erode

21

Heat wave Erode: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்திய அளவில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான ஊர்களில் தமிழகத்தின் ஈரோடு 2வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு 43 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது. முதல் இடத்தில் ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பா உள்ளன.

அங்கு 43.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் கடும் வெப்பம் தகிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஏப்ரல் 27 வரை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும். இன்றும், நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.