தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மகளை கொன்ற தாய்!

20

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் உள்ள சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் பத்மஜா. இவரது மகள் சாஹிதி. சமீபத்தில் பியூசி தேர்வுகளை எழுதினார். இலக்கியத்தில் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததால் இது குறித்து மகளிடம் தாய் பத்மஜா விசாரித்தார். மதிப்பெண் குறைந்ததற்காக மகள் சாஹிதியை, பத்மஜா கண்டித்துள்ளார்

ஆத்திரமடைந்த சாஹிதி வீட்டில் இருந்த கத்தியை கொண்டு வந்து அவரது தாய் பத்மஜாவை குத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பத்மஜா, மகளைத் தாக்கினார். அத்துடன் மகள் கையில் இருந்த கத்தியைப் பறித்து குத்த ஆரம்பித்தார். இதில் படுகாயமடைந்த சாஹிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த பத்மஜாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.