பயங்கர நிலநடுக்கத்திலும் 101 மாடி கட்டடம் சாயாதது எப்படி? – Damper Baby

116

Damper Baby: தைவானில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொத்த நாடும் கடும் பாதிப்புக்குள்ளானது. சாலைகள், கட்டடங்கள் குலுங்கி இடிந்தது. 9 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட 600க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி நடக்கிறது.

நிலநடுக்கத்தில் சிறிய கட்டடங்களே கடும் சேதமடைந்த நிலையில் தைவானின் மிக உயரமான கட்டடமான Taipei 101 கட்டடம் பெரிய அளவில் சேதம் இல்லாமல் தப்பித்திருக்கிறது. காரணம் அதனுள் வைக்கப்பட்டிருக்கும் 660 டன் எடை கொண்ட இரும்பு உருண்டையாகும். இது 1600 அடிகொண்ட கட்டடத்தில், தரையிலிருந்து மேலே 1,000 அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

உலோக உருண்டையானது நிலநடுக்கமோ அல்லது புயல் வீசும்போதோ கட்டடம் ஊசலாடுவதைக் குறைக்கிறது. கட்டடம் ஒருபக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளாகும் சூழலில் அதை தடுக்கும் விதமாக, கட்டடத்துக்கு எதிர்திசையில் இந்த உலோக உருண்டை பெண்டுலம் ஊசலாடி விபத்து ஏற்படுவதை 40 சதவிகிதம் வரை குறைக்கும். அதுவே இப்போது கட்டடத்தை காப்பாற்றி உள்ளது.