10 நாட்களில் 100 கோடி: மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கே போட்டியா? – Aadu Jeevitham

33

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஆடு ஜீவிதம். இயக்குனர் பிளெஸ்ஸியின் அசத்தல் படைப்பு இது. வேறொரு நாட்டில் நஜீப் என்ற இளைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் மலையாளம் தவிர தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.

படம் முதல் நாளிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. ஆடு ஜீவிதம் வெளியான பத்து நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வளைகுடா நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 10 நாட்களில் ரூ 100 கோடியை தாண்டிய முதல் மலையாள படம் என்ற பெருமையை ஆடு ஜீவிதம் பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியான மஞ்சுமாள் பாய்ஸ் 225 கோடி வசூல் செய்து மலையாள திரையுலகில் முன்னணியில் இருக்கும் நிலையில், வரும் நாட்களில் வரும் புள்ளிவிவரங்களை பார்த்தால் ஆடு ஜீவிதம் 225 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.