ஒரே இடம்! இரண்டு விபத்து..மாறி மாறி மோதும் பைக்குகள்! – Bike CCTV

24

Bike CCTV: மதுரை ஒத்தக்கடை மேலூர் மெயின் ரோடு பகுதி எப்போதும் நெரிசலானது. அங்கே ஜம் ஜம் சுவீட்ஸ் கடை எதிரே இருபுறமும் சாலையை கடந்து செல்லும் வகையில் டிவைடரில் இடைவெளி இருக்கிறது. இதில் 4 பக்கங்களில் இருந்தும் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். ஆனால் வேகத்தை கட்டுப்படுத்தி செல்ல அங்கே வேகத்தடை அமைக்கப்படவில்லை. டிவைடர் இடைவெளி பகுதி குறுகி இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.

குறிப்பாக கடந்த ஏப்ரல் 11ம் தேதி மகளுடன் தந்தை ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது, சாலையில் நேராக பைக்கில் வந்தவர் மோதியதில் மூவரும் காயமடைந்தனர். அதேபோல் ஏப்ரல் 13ல் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது, மிதமான வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளைஞர் மோதியதில், இருவரும் காயமடைந்தனர். ஒரே இடத்தில் அடுத்தடுத்த நாட்களில் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.