எனக்கா வயசு ஆகிடுச்சு? சைனிங் அழகை காட்டும் பிரியாமணி! – Priyamani

67

Priyamani: 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் எவரே அடகாடு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியாமணி. 2006ல் பருத்திவீரனில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது கொடுக்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பிறந்தவர் பிரியாமணி. இவரது முழு பெயர் பிரியா வாசுதேவ் மணி ஐயர். அவரது தந்தை, வாசுதேவன் மணி ஐயர். அவரது தாயார் முன்னாள் தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனைலதாமணி ஐயர். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளராக இருந்தார்.

பிரியாமணி பள்ளிப் பருவத்தில் காஞ்சிபுரம் சில்க் , ஈரோடு பரணி சில்க்ஸ் மற்றும் லட்சுமி சில்க்ஸ் போன்றவற்றுக்கு மாடலிங் செய்துள்ளார். பிறகு சினிமாக்களில் நடித்தார். இப்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் கௌரவ வேடங்களிலும் நடிக்கிறார். இவருக்கு 39 வயது ஆனாலும், பார்த்தால் அப்படி தெரியவில்லை என்கிற ரேஞ்சுக்கு போட்டோ வெளியிட்டு வருகிறார்.