நிர்மலாதேவி மாணவிகளை யாருக்காக தவறாக பயன்படுத்த திட்டமிட்டார்?

21

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் குற்றம் உறுதியாகி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிர்மலாதேவி மாணவிகளை தவறாகப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அதேநேரத்தில், நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளை தவறாகப்பயன்படுத்தினார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியுள்ளார்.

சிபிசிஐடி அதிகாரிகள் இந்தவழக்கை சரியாக விசாரிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் தப்பித்துள்ளனர். பல ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. எனவே, மீண்டும் புலன் விசாரணைநடத்தி, தப்பித்த கருப்பு ஆடுகளைத் தண்டிக்க வேண்டும் என கூறினார்.