ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வர என்ன செய்யணும்? – AC Tips

36

AC Tips: உங்கள் ஏசியை எப்போதும் குறைந்த வெப்பநிலைக்கு செட் செய்ய வேண்டும். 24 டிகிரி செல்சியஸ் ஒரு சிறந்த வெப்பநிலையாகும். கம்பெனியே பரிந்துரை செய்கிறது. நீங்கள் வீட்டில் இல்லை என்றால் ஏசியை கண்டிப்பாக அணைத்து வைத்து இருக்க வேண்டும். ஸ்விட்ச் ஆன் செய்து ஏசிக்கு தொடர்ந்து மின்சாரம் செல்ல கூடாது.

இடையில் மின்விசிறியைப் பயன்படுத்துவதன் மூலம் அறையின் வெப்பநிலையை மேலும் குறைக்கலாம். இதனால் ஏசி செலவையும் குறைக்க முடியும். வழக்கமாக ஏசி சர்வீஸ் செய்யப்பட வேண்டும். விண்டோ ஏசியை விட ஸ்பிளிட் ஏசி குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இன்வெர்ட்டர் கம்ப்ரசர்களை கொண்ட ஏசி, இன்வெர்ட்டர் அல்லாத ஏசி கம்ப்ரசர்களைக் காட்டிலும் குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறது. R22 கூலண்ட் ACகளை விட R32 வகை கூலண்ட் ACகள் குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.