Air India: ஈரான் – இஸ்ரேல் இடையே போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏர் இந்தியா விமானங்கள் ஈரான் வான் வெளியை தவிர்த்து வேறு வழியாக பறக்கின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி உள்ளது. இதனால் இரண்டு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பயணத்தை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளன. போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் ஏர் இந்தியா விமானங்கள் ஈரான் எல்லையை தவிர்த்து விட்டன.
போர் நடக்காத நாடுகளின் மீது பாதையை பயணிக்கின்றன. வான்வழி தாக்குதலில் இந்திய விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்தியா இந்த எச்சரிக்கையை விமான போக்குவரத்து ஆணையத்துக்கு வழங்கி இருக்கிறது.