Air Taxi: நெரிசலுக்கு தீர்வாக மின்சாரத்தில் இயக்கும் விமானங்களான எலட்ரிக் ஏர் டாக்சி இந்தியாவில் வர இருக்கிறது. 2026 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஏர் டாக்சிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமும் , இந்தியாவின் இண்டிகோ நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
240 கிலோ மீட்டர் வேகத்தில், 160 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்சிகளில் பயணக் கட்டணம் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏர் டாக்ஸி பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு மட்டுமில்லாமல் சரக்குகள் ஏற்றிச் செல்லவும், மருத்துவம் மற்றும் அவசர சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஏர் டாக்சிகள் 200 விமானங்களுடன், முதலில் இந்தியாவின் தேசியத் தலைநகரான டெல்லியில் தொடங்கப்பட்டு , படிப்படியாக மும்பை, பெங்களூர், என நாடு முழுவதும் சேவையைத் தொடர இருப்பதாக தெரிய வருகிறது.