2019 தேர்தலின்போது, பிரதமர் மோடி விதிகளை மீறி பேசியதாக 6 புகார்கள் எழுந்தன. புகார்கள் குறித்து முடிவெடுக்கும் 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையர்கள் குழு, பிரதமரின் பேச்சு விதி மீறல் இல்லை என முடிவெடுத்தது. ஆனால், தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மட்டும் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இருப்பினும், 2-1 என்ற அடிப்படையில் அவரின் கருத்து வீழ்த்தபட்டது. லவாசாவின் எதிர் கருத்தை வெளியிடவும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதன் பிறகு, பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் லவாசாவின் பெயரும் இடம்பெற்றதாக தகவல் வெளியானது.
தனது பதவிக் காலம் முடியும் முன்பே அவர் பதவியை ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.