3வது முறையாக விண்வெளி பயணிக்கும் சுனிதா வில்லியம்ஸ்!

30

நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். இவருடன் விண்வெளி மற்ற இரு வீரர்கள் போயிங்ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.

பூமியின் சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் முதல் பைலட்களில் ஒருவராக சுனிதா வில்லியம்ஸ் பயிற்சி பெற்று வருகிறார். வரும் மே 6ம் தேதி திங்கட்கிழமை இரவு 10:34 மணிக்கு ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதள வளாகம் 41ல் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.