ரூ.4 கோடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

41

தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ4 கோடி தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்க, அந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததால், நயினார் நாகேந்திரனை விசாரணைக்கு ஆஜராகமாறு போலீஸார் சம்மன் அனுப்பியது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் 4 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது என்னுடைய பணம் என்று பரப்பப்படும் தகவல், அரசியல் சூழ்ச்சி என்றே கருதுகிறேன். காவல் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிப்பேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.