நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகலாம் என டீம் தேர்வுக்கான பெரிய அளவுகோலாக ஐபிஎல் தொடர் பார்க்கப்பட்டது. ஆனால் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடிவரும் தமிழக வீரர் நடராஜன் ரிசர்வ் வீரராக கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது சர்ச்சையாக மாறியுள்ளது.
சரியாக செயல்படாத நிலையிலும் மற்ற வீரர்கள் உலகக்கோப்பைக்கு செல்கிறார்கள். ஆனால் தமிழக வீரர்கள் மட்டும் இரண்டு மடங்கு உழைத்தாலும் தேர்வுசெய்யப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் தமிழக வீரர் பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அஸ்வின், முரளிவிஜய் போன்ற வீரர்கள் 2 போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனால் மட்டும் கேள்வி கேட்கிறார்கள், ஆனால் மற்ற வீரர்களுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்புவதில்லை. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.