அனிமேஷனில் டோனி முகம்..? ராஜமௌலி கலாய்!

27

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்தான் பாகுபலி. இதன் 2 பாகங் கள் வெளியாகி இந்திய அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில் பாகுபலி அனிமேஷன் தொடராக வெளியாகவிருக்கிறது. இதில் பாகுபலி கதாபாத்திரம் பிர பாஸின் முகம் சிஎஸ்கே அணியின் வீரர் முன்னாள் இந் திய கேப்டனுமான டோனியைப் போலவே இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து டோனியை பிடித்ததால் இப்படி உருவாக்கினீர்களா என்ற கேள்வி ராஜ மௌலியிடம் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ராஜமௌலி, “என்னைப் போலவே இந்தக் கதா பாத்திரத்தை அனிமேஷனில் உருவாக்கியவரும் டோனி ரசிகராக இருந்திருப்பார்” எனக் கூறியுள்ளார்.