ஆத்திரத்தில் ஆபாச வீடியோவை அனுப்பிய வங்கி ஊழியர்!

21

சிவா என்பவர் அரியலூரில் தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். கடன் தொகையை வசூலிக்க சென்ற இடத்தில் திருமணமான 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பெண்ணின் கணவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த பெண்ணை சிவா வழக்கம்போல உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். கள்ளக்காதலன் அழைப்பை ஏற்க அந்தப்பெண் மறுத்து விட்டார்.

ஆத்திரமடைந்த சிவா ஏற்கனவே அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். அவரது நண்பர்களில் ஒருவர் இந்த வீடியோவை சென்னையில் உள்ள அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி விட்டார். அவர் போலீசில் புகார் அளித்தார்.