காய் வடிவில் ஓர் இயற்கை வயாகரா? எகிறிய பீட்ரூட் விற்பனை! – Beetroot juice

57

Beetroot juice: பாலியல் செயல்பாடுகளில் பீட்ரூட் ஊக்கியாக உதவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் பீட்ரூட்டுக்கு திடீர் தட்டுப்பாடு எழுந்துள்ளது. உணவு பொருளாக பீட்ரூட் உடலின் சேர்வதன் மூலம், பாலியல் செயல்பாடுகளில் வீரியம் அதிகரிக்கும் என ஆதிகால சான்றுகள் இருப்பதாக தகவல் பரவியது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் தொடங்கி தினசரி உடற்பயிற்சியில் மேம்பாடு வரை பீட்ரூட் உடலுக்கு நன்மை தருகிறது.

ரோமானியர் காலத்தில் இருந்தே பீட்ரூட் சாறு பாலுணர்வு ஊக்கியாக பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்த நாளங்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடலுறவுக்கு முன்னும் பின்னும் ஆண்களின் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உணவில் கணிசமாக பீட்ரூட் இடம்பெறுவது பொதுவான ஆரோக்கியத்துக்கும், தம்பதியரின் பாலியல் வாழ்க்கைக்கும் உதவுவதாக அமையும் என கூறப்படுகிறது.