Loan Cheat: பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர் 68 வயதான உறவினர் பெயரில் வங்கியில் கடன் பெறுவதற்காக அவரை சக்கரநாற்காலியில் அமரவைத்து அழைத்து வந்துள்ளார். மருமகள் என கூறி அவரது பெயரில் 3250 டாலர் கடனாகப் பெற முயன்றார்.
அந்த நபர் சக்கரநாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடி இருந்ததால் மரணமடைந்துவிட்டார் என வங்கி ஊழியர்கள் கருதினர். இதையடுத்து அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்தனர்.
அவர்கள் வந்து பரிசோதித்ததில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக காவல் துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணைக் கைது செய்தனர். இறந்தவரின் பெயரில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட முயன்றதாக அப்பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.