கைது நடவடிக்கையின்போது கழுத்தை நெரித்த போலீசார் – வீடியோ!

26

அமெரிக்காவில் விபத்து குறித்து விசாரிக்க வந்த போலீசார் டைசன் என்பவரை கீழே தள்ளி அவரை கைது செய்ய முயற்சித்தனர். இதனால் டைசன் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், போலீஸ்காரர் ஒருவர் டைசனின் கழுத்தை தனது காலால் நெரித்து கைது செய்ய முயன்றுள்ளார். போலீஸ்காரர் கழுத்தை நெரித்ததால் டைசனுக்கு மூச்சுவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

டைசன், என்னால் மூச்சுவிடமுடியவில்லை. எனது கழுத்தில் இருந்து காலை எடுங்கள் என கதறியுள்ளார். ஆனால், அந்த போலீஸ்காரர், அமைதியாக இருங்கள், உங்களுக்கு ஒன்றும் ஆகாது என கூறி சில நிமிடங்கள் கழுத்தை காலால் இறுக்கியுள்ளார்.இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்ட டைசன் மயக்கமடைந்தார்.

எந்தவித அசைவும் இன்றி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டைசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். கைது நடவடிக்கையின்போது போலீசார் கழுத்தை நெரித்ததில் கருப்பினத்தவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.