சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4 ஆவது மாடியில் இருந்து ஏழு மாத கைக்குழந்தை தவறி தகர சீட்டில் விழுந்தது. தவறி விழுந்த குழந்தையை அதே குடியிருப்பில் வசிப்பவர்கள் பத்திரமாக மீட்க முடிவு செய்தனர்.
தரை தளத்தில் சிலர் ஒன்றுகூடி பெரிய துணியை விரித்து பிடித்தனர். ஒருவேளை குழந்தை தகர சீட்டில் இருந்து கீழே விழும் பட்சத்தில் அதனை பத்திரமாக பிடிக்க ஏதுவாக துணியை அவர்கள் லாவகமாக பிடித்துக் கொண்டனர்.
பல்கனி வழியே வெளியே வந்த நபர் ஒருவர், அங்கிருந்த தடுப்பின் மீது ஏறி குழந்தையை தகர சீட்டில் இருந்து பத்திரமாக மீட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.